Monday 13 December 2010

நீங்கள்


நீ விதைத்தவைகள்
பூக்கும் வேளையில்
திசைகள் முறிந்தனவோ?
**
அவர் பற்றியோ..
இவர் பற்றியோ..
இல்லாமல் உன் முகம் பார்த்து நிற்கின்றன..
உன் செடிகள்!
ஒரு உழைப்பு ஓய்வு கொள்கிறது!
சக பயணி-
கிளை பிரிகிறது.
**

நாற்றங்கால்களாய் நாங்கள்.
சிலகணம் நினைப்பதுண்டு..
வலிக்காமல் வாழ்க்கையில்லை.
எனினும்-
பிறர் மரணம் எனினும் வலிக்கவே செய்கிறது.
இங்கு-
தன் மரணம் பற்றியே உழல்கிறது.
**



சிலுவை யுத்த நாட்களில்
புத்தனின் அடவடித்தனம்.
வியாபாரிகளின் உலகம்.

நீங்கள் நாங்களாகி
நாமாக, நாணாக
இணைகையில்
பாதி வழியில்
பாதை தவறியதாய்
நான் நின்றேன்.....

என் தாய்க்கும்
மகனாகி
எனக்கும் நண்பனாகி
தோள்தொட்டாய்!
தொடர்ந்தாய்!!

என் தோட்டத்தில்
விழுதுகள் இறுகியதாய்
உணர்ந்தேன்
இப்பொழுது
வேரறுந்து நின்றேன்!
காற்றும்
பொய் சொல்லிச் சென்றது!!

1 comment:

  1. வணக்கம் எழுத்தாளர் முல்லை அமுதன் அவா்களே! தங்கள் ஆக்கங்கள் சிலவற்றைப் பார்த்தேன் பார்த்தவரை அனைத்தும் மிக அற்புதம். வித்தியாசமான பார்வைகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete