Sunday 25 December 2011

நூல்களும்....


நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..!
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்..
இப்போது நீ..!...
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்...
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்...?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே....
என்னைப்போல இறந்து விடுவார்கள்...!
- முல்லைஅமுதன் -

2 comments:

  1. புத்தகங்களை இரவல் வாங்குகிறவர்கள் திருப்பித் தரா வலியை அழகாக எடுத்துச் சொல்கிறது "நூல்களும்". பலருக்கு எல்லா புத்தகங்களுமே பொழுது போக்கானவை. சிலருக்கு தான் எல்லா புத்தகங்களும் வாழ்க்கையானவை. புத்தகங்களை தொலைத்துவிடுகிறவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறவர்களாகவும்..நல்ல நண்பனை தொலைத்து விடுகிறவர்களாகவும் உணர்வதில்லை. சிலர் தொலைந்துவிட்டதாய் கூறிக்கொண்டு தமக்கு சொந்தமாக்கி கொள்கிற அறப்படித்த அறிவாளிகளாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. பொன் தொலையும் வலியை விடஇபொருள் தொலையும் வலியைவிட
    நல்ல புத்தகம் தொலையும் வலி ஈடுசெய்ய முடியாதது...இல்லையா?
    யதார்த்தமான படைப்பு

    ReplyDelete