
உருவாகும் போராளி!
இப்படி-
உட்கார்ந்து கொள்ள
உனக்கு முடிகிறது?
தந்தையைப் பற்றி
புகார் செய்ய
பொலிசிடம் போன
உன் தங்கை
கற்பழிக்கப்பட்டு
திரும்பி வரவும்..
பயங்கரவாதி என
கைது செய்யப்பட்ட
உன் தம்பி பற்றி
விசாரிக்கப்போன
உன் அம்மா
பிணமாய் வந்ததும்..,
இறந்த உடலைக் காட்டி
'இது உன் தம்பியா?'
என்ற போது
இல்லை என்று அழுதபடி
பொய் சொன்ன அக்காள்
நிரந்தரமாய்-
அழுகையைக் கட்டிக்கொண்டதும்..,
இதற்குப் பிறகும்
உட்கார்ந்து கொள்ள
உன்னால் முடிந்திருக்கிறது.!
ஒன்று சொல்வேன்-
உனக்குள்ளும்
ஒரு போராளி
உருவாகி கொன்ன்டிருக்கிறான்
என்பது எனக்குத் திடமாகத் தெரிகிறது!
-முல்லைஅமுதன் (-1994-)
ஐயா எப்படி நலமாக இருக்கிறீர்களா
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை இணையப்பக்கத்தில் பார்க்கமுடிந்தது
சிறப்பான கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்
உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய முறை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை அதனால்தான் இப்படி தொடர்புகொள்ளவேண்டியதாயிற்று
சரி மடலின் நோக்கத்திற்கு வருகிறேன்
நானும் வலைப்பூ ஒன்றை இலங்கையிலிருந்து எழுதிவருகிறேன்
முற்றுமுழுதும் கவிதையால் வார்த்திருக்கும் வலைப்பூ அது
நீங்கள் அதைப்பார்க்க வேண்டும் விமர்சனம் கூறவேண்டும்
எனக்கும் ஓர் தூண்டுகோலாக இருக்குமே
நன்றி
உங்கள் பதிலின் எதிர்பார்ப்புடன்
www.masteralamohamed.blogspot.com
sirajmohamed21@gmail.com
supper poem.......
ReplyDeletei like this..
முல்லை வேந்தே படித்தேனே-கவிதை
ReplyDeleteமுழுவதும் இங்கே துடித்தேனே
எல்லை இல்லா துயர்கொண்டே -நீர்
எழுதிய உணர்வை நான்கண்டே
சொல்ல இயலா நிலைபெற்றேன்-மாறா
சோக வடிவை நானுற்றேன்
ஒல்லை ஈழம் பெறுவோமே-இந்த
உலகம் போற்ற வாழ்வோமே
புலவர் சா இராமாநுசம்
முடிந்தால் என் வலைப் பக்கம் வாருங்கள்
புலவர் குரல்
ஐயா உங்கள் படைப்பை வாழ்த்த வயதில்லை ,...இனி உங்கள் படைப்புக்கு நான் ரசிகனானேன் ,...:)
ReplyDelete