சென்ற ஆண்டு விலகிச் சென்றதில்
அதிக
வருத்தம் இல்லை.
வரும் நிச்சயமாய்
அதிக
நோவுகளைச்
சுமந்து வரத்தான் போகிறது எனப்தே!
என்னுள் உறைக்கிற
உண்மைகள்!
இது
வரை வருந்தாத
உலகங்கள்
எனி
எமக்காக
அழும் என்பதிலும்
கிஞ்சளவும் எதிர்பார்ப்பு இல்லை.
ஆடும் நனையும்!
ஓனாயும் அழும்!!
நான்
நாமாக
மாறும் வரை
வருடங்கள் இனிக்காது!!
முல்லைஅமுதன்
03/01/2013

No comments:
Post a Comment